ஆசிரியர் தினத்தையொட்டி 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பேசியது:
பள்ளிக் கல்வித் துறைக்காக நிகழாண்டில் ரூ.19 ஆயிரத்து 634 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியின் மூலம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறை, தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 85 ஆயிரம் ஆசிரியர்கள், 9-ஆம் வகுப்பில் கற்பிக்கும் 64 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதேபோல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது. முதுநிலை ஆசிரியர்களுக்கு பாட வாரியாகப் பயிற்சி வழங்கப்பட்டதால் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதம் 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் பெருமை ஆசிரியர்களையே சாரும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆசிரியர் நல நிதிக்காக ரூ.3 லட்சத்துக்கான காசோலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினார்.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் ச.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.