ஓணம் பண்டிகை: வாழ்த்து

கேரள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் கொண்டாடும் வண்ணமயமான பண்பாட்டுத் திருநாள் ஓணம். வஞ்சகம், சூழ்ச்சி, ஆணவம், அகம்பாவம் ஒழிக்கப்பட்டு அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரநேயம்,
பகிர்ந்துண்ணும் பண்பு ஆகிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை சமுதாயத்துக்கு ஓணம் திருநாள் உணர்த்துகிறது.

பகைவரால் வெல்ல முடியாத மாபலிச் சக்கரவர்த்தியை, குள்ளமான வடிவுகொண்டு விஷ்ணு அழித்ததாகப் புராணக் கதை கூறுகிறது. இந்தக் கதைப்படி வஞ்சகத்தால் மாபலி கொல்லப்பட்டாலும், அந்த மன்னன் நாட்டைக் காண வருவான் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் வசிக்கும் மலையாள மக்கள் அனைவரும் உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ ஓணம் திருநாளைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காகக் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், சென்னை மாநகருக்கும் திமுக ஆட்சியில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: அத்தப்பூ கோலம் போட்டு, புத்தாடை அணிந்து. சத்ய விருந்தளித்து ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நல்வாழ்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய சிந்தனை தழைத்தோங்கவும், அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த நாள் வழிகாட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...