அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சியில் சேர 3 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும், அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சியில் சேர, 3 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


சிவில் சர்வீஸ் தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 போன்ற தேர்வுகளில், கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள், சென்னை இளைஞர்களுக்கு, சென்னை மாநகராட்சி சார்பில் பயிற்சி அளிக்கப்படும் என்று, மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

கடந்த ஆண்டு, இதற்கான பயிற்சியில் வெறும் 80 மாணவர்கள் மட்டுமே, இறுதிவரை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த ஆண்டு அரசு பணி தேர்வுக்கான பயிற்சிகளில் கலந்துகொள்ள, அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், மாநகராட்சிக்கு வந்துள்ளன. இதில், ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு மட்டும் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வட்டாரத்திற்கு ஒரு பள்ளி என, மூன்று வட்டாரத்திற்கு மூன்று பயிற்சி மையங்களை, மாநகராட்சி அமைக்க உள்ளது; விரைவில், பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. மாணவர்களின் திறனை பரிசோதித்து, அதற்கேற்ப அவர்களுக்கு, சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க செய்வதா, தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க செய்வதா என்று, நிபுணர்கள் முடிவு செய்வர்.

இதை பொறுத்து, தொடர் பயிற்சிகள் அளிக்கப்படும். சென்னை இளைஞர்களை தவிர்த்து, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து, தங்கி படிக்க விரும்பும் இளைஞர்களுக்கும், இந்த பயிற்சி மையங்களில் இடம் உண்டு. மேயர் அலுவலகத்தில் நேரடியாகவோ, மாநகராட்சி கல்வித்துறை அலுவலகத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமிகளில் வகுப்பெடுக்கும் திறன்வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலமே, இப்பயிற்சிகளை மாநகராட்சி அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...