பள்ளியில் சேர்க்க வழி தெரியாமல் பெற்றோர் தவிப்பு; குடியிருப்பை சுற்றி சொல்ல முடியாத அலங்கோலம்.. 40 குழந்தைகள் கதி?

கொஞ்சம் கூட அடிப்படை வசதி இல்லாத கன்டோன்மென்ட் மைதானத்தில் வசிக்கும், துப்புரவு தொழிலாளர்களின், 40 குழந்தைகள், பள்ளிக்கூட வாசலை எட்டி பார்க்காத அவலம் நீடிக்கிறது. நங்கநல்லுார், பி.வி., நகரில், கன்டோன்மென்டுக்கு சொந்தமான, 13 ஏக்கர் மைதானம் உள்ளது. அதில், ஆந்திராவைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர், கொட்டகை அமைத்து, தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழிகாட்டுவார் யார்?

அவர்கள், பல்லாவரம், பரங்கிமலை கன்டோன்மென்ட் மற்றும் மாநகராட்சி பகுதிகளில், தினக்கூலி துப்புரவு பணியாளர்களாக பணிபுரிகின்றனர். குடியிருப்புகளுக்கு, கழிப்பறை, குடிநீர், மின்சார வசதிகள் எதுவும் கிடையாது. மைதானத்தை சுற்றியுள்ள திறந்தவெளி இடங்களை, கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். அவர்களின், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் மைதானத்தில் சுற்றித் திரிகின்றனர். பள்ளியில் சேர்க்க, போதிய வழிகாட்டுதல் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாக, பெற்றோர் குமுறுகின்றனர். இதுகுறித்து, துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், 'சாக்கடைக்குள் வேலை செய்யும் நாங்கள், எட்டு ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். தினமும், 200 ரூபாய் வரை, கூலி கிடைக்கும்' என்றனர்.மேலும்,'குழந்தைகளை படிக்க வைக்க ஆசை தான். ஆனால், அதற்கான எந்த வழியும் தெரியாமல் தவிக்கிறோம். நாங்கள் தங்கி இருப்பது கன்டோன்மென்ட் பகுதி. குடிநீருக்காக கையேந்துவது, மாநகராட்சி பகுதி. இரு நிர்வாகங்களும், மாறிமாறி கையை நீட்டி அலட்சியம் காட்டுவதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றனர். அவர்; இவர் : இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,''துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருப்பது கன்டோன்மென்ட் பகுதி. எனவே, அவர்கள் தான் வசதி செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார். கன்டோன்மென்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மைதானத்தை சுற்றி இருப்பது, மாநகராட்சி பகுதி. குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவை அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. துப்புரவு தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மாநகராட்சி தான் செய்து தர வேண்டும்,'' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...