பல்கலைக்கழக மானிய குழுவின் கிடுக்கிப்பிடியால், புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த பொருளாதார படிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளை கண்காணித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), கடந்த சில மாதங்களாக பாடத் திட்டங்களில் அதிரடி மாற்றங்களை புகுத்தி வருகிறது.
முதற்கட்டமாக, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., ஐந்தாண்டு படிப்புகளில், சில முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. எம்.எஸ்சி., படிப்புகளை பொறுத்தவரை ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பொருளாதார படிப்பு என்பது கிடையாது என, அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், பொருளாதார படிப்பு, இனி வரும் காலங்களில் எம்.ஏ., என்றே நடத்தப்பட வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், வெளிநாடுகளை பின்பற்றி எம்.எஸ்சி., பொருளாதார படிப்பு ஆரம்பித்துள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. யு.ஜி.சி.,யின் விதிமுறைகளைகளின்படி, அனைத்து கல்லுாரிகளிலும் எம்.ஏ., பொருளாதார படிப்புதான் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் எம்.எஸ்சி., என்ற பெயரில் பொருளாதார படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 130 மாணவர்கள் இப்படிப்பை படித்துள்ளனர். இந்தாண்டு நுழைவுத்தேர்வின்போது கூட எம்.எஸ்சி., பொருளாதாரம் என்றே குறிப்பிடப்பட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இப்படிப்பில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தற்போது, பொருளாதாரம் படித்து வரும் மாணவர்களுக்கு எம்.எஸ்சி., எக்கானமிக்ஸ் என்றே தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, அடுத்து வரும் மதிப்பெண் சான்றிதழ்களில் பல்கலைக்கழக மானிய குழுவின் அறிவுறுத்தலை மீறி எம்.எஸ்சி., எக்கனாமிக்ஸ் என்று குறிப்பிடப்படுமா அல்லது எம்.ஏ., பொருளாதாரம் என்று பதிவு செய்யப்படுமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர். யு.ஜி.சி.யின் எம்.எஸ்சி., எக்கனாமிக்ஸ் படிப்பை நீக்குவதற்கான அரசாணையில், முன் அல்லது பின் தேதி ஏதும் குறிப்பிடப்பட்டு வெளியிடப்படவில்லை. இதனால், பல்கலைக்கழக நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், எம்.எஸ்சி., பொருளாதாரம் என்ற பெயரில் சான்றிதழ் தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை பல்கலைக்கழக மானிய குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் பல்கலை., நிர்வாகம் இறங்கியுள்ளது. வரும் மாணவர்களுக்கு எம்.எஸ்சி., எக்கானமிக்ஸ் என்றே தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு, அடுத்து வரும் மதிப்பெண் சான்றிதழ்களில் பல்கலைக்கழக மானிய குழுவின் அறிவுறுத்தலை மீறி எம்.எஸ்சி., எக்கனாமிக்ஸ் என்று குறிப்பிடப்படுமா அல்லது எம்.ஏ., பொருளாதாரம் என்று பதிவு செய்யப்படுமா என, குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர். யு.ஜி.சி.யின் எம்.எஸ்சி., எக்கனாமிக்ஸ் படிப்பை நீக்குவதற்கான அரசாணையில், முன் அல்லது பின் தேதி ஏதும் குறிப்பிடப்பட்டு வெளியிடப்படவில்லை. இதனால், பல்கலைக்கழக நிர்வாகமும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், எம்.எஸ்சி., பொருளாதாரம் என்ற பெயரில் சான்றிதழ் தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை பல்கலைக்கழக மானிய குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் பல்கலை., நிர்வாகம் இறங்கியுள்ளது.