45 குழந்தைகளை காப்பாற்றிய டிரைவர் !!@

விருத்தாசலம் அருகே ரயில் பாதையின் குறுக்கே பள்ளி வேன் நிற்பதை பார்த்து ரயிலை நிறுத்தி பள்ளிக் குழந்தைகள் 45 பேரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநரை ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டினார்.


காரைக்காலில்
இருந்து பெங்களூர் பயணிகள் ரயில், கடந்த மாதம் 25}ஆம் தேதி கடலூர் துறைமுகம் சந்திப்பில் புறப்பட்டு, விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, குறிஞ்சிப்பாடி அருகே கன்னிதமிழ்நாடு-பெத்தநாயக்கன்குப்பம் இடையே உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டில்,  பள்ளி வேன் ஒன்று ரயில்பாதையில் பாதியும், சாலையில் பாதியுமாய் நின்று கொண்டிருந்தது.  இதை 300 மீட்டர் தொலைவில் கவனித்த, ரயில் ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு, வேன் நின்ற இடத்துக்கு 10 மீட்டர் முன்னால் ரயிலை  நிறுத்தினார். இதனால், அந்த வேனில் இருந்த குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியைச் சேர்ந்த 45 குழந்தைகள் உயிர் தப்பினர். இதன் பிறகு, கடலூர் துறைமுகம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வேன் அப்புறப்படுத்தப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து, போலீஸார் வேன் ஓட்டுநர் பெத்தநாயக்கன்குப்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

இந்த நிலையில், மிக சாமர்த்தியமாக செயல்பட்டு, பள்ளிக் குழந்தைகள் 45 பேரின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் விருத்தாசலத்தைச் சேர்ந்த எம்.குலாம் தஸ்தகிர்(54), உதவி ஓட்டுநர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த எஸ்.பாலாஜி (25) ஆகியோரை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.  அப்போது, ஆட்சியரிடம் மனு அளிக்க கூடியிருந்த பொதுமக்களும் ரயில் ஓட்டுநர்களை பாராட்டினர்.

இதுகுறித்து, ரயில் ஓட்டுநர் குலாம் தஸ்தகிரிடம் கேட்டபோது, ரயில் பாதையில் வேன் நிற்கும்போது, உள்ளே பள்ளி குழந்தைகள் இருக்கிறார்களா என்று அறியமுடியவில்லை. வேன் மீது ரயில் மோதி விடக்கூடாது என்பதே எங்கள் இருவருடைய நோக்கமாக இருந்தது.

  70 கி.மீ. வேகத்தில் சென்ற ரயிலை, 300 மீட்டருக்குள் நிறுத்துவது என்பது சிரமம் என்றபோதிலும், அவசர கால பிரேக்கை பயன்படுத்தி நிறுத்த முயற்சி செய்தோம். இந்த முயற்சியின் பலனாக வேனுக்கு 10 மீட்டர் முன்னால் ரயில் நின்றது. அப்போதுதான் வேனுக்குள் பள்ளிக் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...