மாணவர்களின் கைகளில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கி கொடுமை

ஆத்தூர் அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், மாணவர் ஒருவரின் 110 ரூபாய் திருடு போனதை கண்டுபிடிக்க, 13 மாணவர்களின் கைகளில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கியதால்,
அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

65 பேர்: சேலம் மாவட்டம், தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, மும்முடி கிராமத்தில், மாணவர் விடுதி உள்ளது; இங்கு 65 பேர் தங்கியுள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி ஏழாம் வகுப்பு படிக்கும், பழங்குடியின மாணவர் ஒருவரது பெட்டியில் வைத்திருந்த 110 ரூபாய் மாயமானது.

பணத்தை இழந்த மாணவர், தன் அறையில் தங்கியிருந்த 13 பேரும், கைகளில் கற்பூரம் அணையும் வரை வைத்திருந்து, சத்தியம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை அடுத்து, மாணவர்களின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த விடுதி வார்டன், சத்தியம் செய்ததற்கும், வார்டனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மாணவர்களிடம் எழுதி வாங்கினார். உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வலி தாங்க முடியாமல், விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள், தங்களது பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று காலை, 8:00 மணிஅளவில் விடுதியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த, கெங்கவல்லி தொகுதி, தே.மு.தி.க.,- - எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் ஆர்.டி.ஓ., - தலைவாசல் ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அலுவலர் கள், விடுதி மாணவர்களிடம் விசாரித்தனர்.

புகார்: மாணவர் சேர்க்கைக்கு, தலா 1,500 ரூபாய் வசூல் செய்ததாகவும், இரவு நேரத்தில், வார்டன், சமையலர்கள், விடுதியில் தங்கி பணிபுரிவதில்லை என்றும், தரமான உணவு, சிக்கன், மட்டன், சோப்பு, எண்ணெய் வழங்குவதில்லை என்றும், மாணவர்கள் சரமாரியாக புகார் கூறினர். காலை, 11:00 மணியளவில், பணிக்கு வந்த வார்டன், சமையலர்களிடம் விசாரணை நடத்தி, உணவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...