பீகார் மாநிலத்தின், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், பிளஸ் 2 விற்கான அனைத்து பாடங்களையும் படித்து முடித்து, மற்றவர்களுக்கு வகுப்பு நடத்தும் அளவுக்கு நிபுணனாகி
விட்டான்.
பீகார் மாநிலத்தின், மோதிஹரி பகுதியில் பிரபல டாக்டர் அசோக் ஸ்ரீவத்சவ்வின் பேரன் அனக் அனன்யா; அப்பகுதியில் உள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தந்தை, அதுல் பிரகாஷ், ஆசிரியராக பணிபுரிகிறார். பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டான். பல்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான, பல தகவல்களை, இவனிடமிருந்து அறிந்து கொள்கின்றனர்.
மகனின் அறிவாற்றல் குறித்து, அவனது தாய் பிரீதி ஸ்ரீவத்சவ் கூறியதாவது: இரண்டு வயது நிரம்பியவுடன் கணிதத்தையும், அறிவியலையும் படிக்கத் துவங்கிய அனக், நாளடைவில், அனைத்து பாடங்களையும் கற்கத் துவங்கினான். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து, தன் திறமையை வெளிப்படுத்தினான்.
இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட, பிளஸ் 2விற்குரிய அனைத்து பாடங்களிலும் தனித்திறமை பெற்றுள்ளான். சமஸ்கிருத பாடங்களை மனப்பாடம் செய்துள்ள அனக், தற்போது, பிரிட்டிஷ் உச்சரிப்பிலான ஆங்கிலத்தை கற்று வருகிறான். இவ்வாறு பிரீதி கூறியுள்ளார்