"பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 9.51 கோடி மாணவர்கள் பார்த்தனர்

 ஆசிரியர் தினத்தன்று, மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை நாடு முழுவதும், 8.5 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த, 9.51 கோடி மாணவர்கள் பார்த்துள்ளனர் என,
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் 100 நாள் ஆட்சியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆசிரியர் தினத்தன்று, மாணவர்களுடன் கலந்துரையாடியதுபோல, குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதியன்றும், பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, இப்போது தெரிவிக்க இயலாது. நேரம் வரும்போது அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இவ்வாறு இரானி கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...