போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தினமான நாளை, தங்களது சான்றிதழ்களை ஆசிரியர்
தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திருப்பியளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

                                                                                 

ஆசிரியர் தேர்வு முறையில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்களின் போராட்டம் 11ஆவது நாளாக நீடிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...