ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு

ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய
உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
                                                                           


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

கூடுதல் செய்தி
 தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு  கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...