கல்லூரிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது குறித்து சனிக்கிழமை
அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத் தர வேண்டும். சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மத்தியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமப் பல்கலைக்கழகம் தவிர, மாநிலப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இந்திப் பாடத்தையும், இந்தி வழிக் கல்வியையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றே இதற்கு பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
28-7-2011-இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய இந்தி குழுவின் 30-ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்லூரிகளில் இந்தியைக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த சுற்றறிக்கை மோசமான இந்தித் திணிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சமூக ஊடகங்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும், சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினம் "குரு உத்சவ்' என மாற்றம் போன்ற உத்தரவுகளின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன் தொடர்ச்சியாக இப்போது பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தியைத் திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்றார் ராமதாஸ்