மோசமான நிலையில் அரசுப் பள்ளிக் கழிப்பறைகள்!

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மாவட்ட கல்வித் தகவல் முறையின் (ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீ ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம் ச்ர்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்-ஈஐநஉ) கீழ் அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆண்டுதோறும் தகவல்

கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள் தொடர்பாக கடந்த 2013-14 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 37,002 அரசுப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,442 பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் உள்ளன.

அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளில் மாணவிகளுக்கான 958 கழிப்பறைகளும், மாணவர்களுக்கான 1,159 கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக "அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட' அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பொதுவான கழிப்பறைகள் உள்ளன.

பொதுவான கழிப்பறைகளில் கூட மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக கழிப்பிட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட கல்வி தகவல் முறையின் கீழ் இந்தப் பொதுவான கழிப்பறைகள் கணக்கில் கொள்ளப்படாததால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கென தனித் தனிக் கழிப்பறைகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி சேகரிக்கப்பட்டவை ஆகும். இந்த தகவல்கள் கடந்த ஆண்டே எங்களுக்குக் கிடைத்தவுடன், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பறைகளைப் பழுதுபார்க்க உத்தரவிடப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து பள்ளிகளில் புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 2,700 கழிப்பறைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. அதோடு, 4 ஆயிரம் பொதுக் கழிப்பறைகளும், மாணவிகளுக்கென 2,300 கழிப்பறைகளும் கடந்த 2013 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு கட்டப்பட்டுள்ளன.

பல இடங்களில் கழிப்பறைகள் இருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாத நிலை உள்ளது. கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.



மாவட்டம் வாரியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பறைகளின் விவரம்

(மாவட்டம், பெண்கள் கழிப்பறை, ஆண்கள் கழிப்பறை)

1. விழுப்புரம் 188 211

2. வேலூர் 102 118

3. மதுரை 76 104

4. பெரம்பலூர் 86 82

5. தருமபுரி 50 51

6. கடலூர் 42 56

7. விருதுநகர் 30 31

8. கரூர் 44 18

9. திண்டுக்கல் 32 42

10. காஞ்சிபுரம் 17 30

11. கிருஷ்ணகிரி 31 15

12. நாகப்பட்டினம் 23 32

13. நாமக்கல் 32 35

14. புதுக்கோட்டை 19 39

15. ராமநாதபுரம் 15 16

16. சேலம் 12 24

17. சிவகங்கை 16 21

18. தஞ்சாவூர் 10 11

19. நீலகிரி 20 22

20. தேனி 04 08

21. திருவள்ளூர் 33 34

22. திருவாரூர் 04 10

23. தூத்துக்குடி 06 10

24. திருச்சி 13 34

25. திருநெல்வேலி 19 26

26. திருவண்ணாமலை 15 15

27. கோவை 09 30

28. சென்னை 01 0

29. ஈரோடு 08 30

30. கன்னியாகுமரி 01 02

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...