அரசு கேபிள் டி.வி. மூலம் இணையதள சேவை வழங்குவது தொடர்பாக இயக்குபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் இணையதள சேவை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், பிற இணையதள சேவைகள் ஆகியவற்றை வழங்க மத்திய அரசின் ரயில்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கேபிள் டி.வி. இயக்குபவர்களுக்கு இதுகுறித்து விளக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தின் முதல்முதலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கேபிள் டி.வி. இயக்குபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொதுமேலாளர் பிரியா தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியது:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது 63 கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து 26,246 கேபிள் இயக்குபவர்கள் மூலம் 70.52 லட்சம் சந்தாதாரர்களுக்கு கேபிள் டி.வி. சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை வழங்கும் திட்டம் குறித்து கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் அறிக்கைக்கு செயல்வடிவம் தரும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், இந்திய அரசின் ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட, வட்ட, உள்ளூர் கேபிள் இயக்குபவர்களின் கட்டமைப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் அகண்ட அலைவரிசை சேவைகளையும், இதர இணையதள சேவைகளையும் குறைந்தக் கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. வழங்கும்.
இதுதொடர்பாக மாவட்டந்தோறும் உள்ள கேபிள் (தனி) வட்டாட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கேபிள் இயக்குபவர்களுக்கு ஒரு மாத காலம் பயிற்சி அளிப்பர். அவை முடிந்ததும் இந்த சேவை எப்போது செயல்படும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார் அவர்.
காஞ்சிபுரத்தில் தொடங்கிய இந்தக் கூட்டம் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள நிலையில் அதற்கான சேவைக் கட்டணத்தை அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக் கட்டணத்துடன் வரி தனியாக வசூகிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் ரயில்டெல் நிறுவனத்தின் மேலாளர்கள் கிருபானந்தம், பாஸ்கரன், செந்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. முதன்மை தொழில்நுட்ப ஆலோசகர் முரளி ஆகியோர் பேசினர்.
இணையதள சேவைக் கட்டண விவரம்
காஞ்சிபுரம்: அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள நிலையில் அதற்கான சேவைக் கட்டணத்தை அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக் கட்டணத்துடன் வரி தனியாக வசூகிக்கப்படும்.
வீட்டு உபயோகத்திற்கான திட்டம் எல்லையற்றது
வ.எண் - வேகம் - மாதாந்திரக் கட்டணம் (ரூ)
1. 512kbps - 499
2. 1 mbps - 899
3. 2 mbps - 1399
4 .4 mbps - 2499
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டம் - எல்லையற்றது

1 1mbps - 2,199
2 2mbps - 3,499
3 4mbps - 6,999
4 8mbps - 11,999
5 10mbps - 14,999
வ.எண் - வேகம் - மாதந்திரக் கட்டணம் (ரூ) - பயன்பாட்டு அளவு - வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல்
1 1mbps - 530 - 20 GB - 384 kbps
2 1mbps - 749 - 40 GB - 256 kbps
3 2mbps - 799 - 20 GB - 512 kbps
4 4mbps - 899 - 30 GB - 512 kbps
5 10mbps - 1099 - 40 GB - 512 kbps
Email0 Print A+ A A-
இந்த பகுதியில் மேலும்
2016-இல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்
காவிரியில் மூழ்கிய 4 சிறுவர்கள்: மூன்று பேரை மக்கள் மீட்டனர்
பவானி அருகே தீ விபத்து: டிரான்ஸ்பார்மர் வெடித்தது
அரசு கேபிள் டி.வி. மூலம் இணையதள சேவை: இயக்குபவர்களுக்கு விளக்கம்
பெரியாறு அணை பராமரிப்பு பணியை கேரள வனத் துறை தடை செய்யக் கூடாது: மூவர் கண்காணிப்புக் குழு
செங்கல்பட்டு நகராட்சி இடைத்தேர்தல்: ரத்து செய்யக் கோரி வழக்கு
திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி சாவு: 15 பேர் காயம்
விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முழு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
மதுக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் ஊதியம்: வயதுவந்தோர் கல்வித் திட்ட ஊழியர்கள் அவதி
தமிழில் பேசுவதை இயக்கமாக மாற்ற வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் வேண்டுகோள்
பாலியல் தரகராக செயல்பட்ட பாகிஸ்தான் உளவாளி
இந்து முன்னணி அலுவலகத்துக்கு மீண்டும் மிரட்டல் கடிதம்
7-ஆவது ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை: 32 லட்சம் பேர் பயன்
"கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களின் காலாவதியை நீட்டிக்கக் கூடாது'