போலி பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தயாரித்த நால்வர் கைது

பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்ததாகக் கூறி தந்தை, மகன் உட்பட 4 பேரை சென்னை குற்றப்பிரிவு
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கொடுங்கையூரில் வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து வந்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்திய போது, போலிச் சான்றிதழ்கள் அச்சடிக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இவர்களிடம் போலிச் சான்றிதழ் வாங்கி பணிகளில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடப்பதால், இதில் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...