ஆசிரியர்கள் தேவை

அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம்
உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த
நிலையை மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேtர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


நடப்பாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும¢ ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் பணியிடங்கள¢ வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஸீ31.82 கோடி கூடுதல் செலவாகும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் 1:40 விகிதம் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிகளின் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கு எம்.பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...