வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி
தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.