SSTA மாநில பொறுப்பாளர்களின் சென்னை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு



நேற்று காலை நமது மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் மதிப்புமிகு தொடக்ககல்வி இயக்குனர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை
சந்தித்து பின்வரும் நமது கோரிக்கைகள் பற்றி விரிவாக விவாதித்தனர்.

* SSTA சார்பாக தொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு.
*CRC வேலைநாளுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு (இயக்குநர் பதில் -விரைவில் SSA திட்ட இயக்குநரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எட்டப்படும்)
* தொடக்க கல்வி துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்  CPS கணக்கு ஒப்புகை சீட்டு     
* மலைப் பகுதி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு.  மட்டும் அவர்கள்     
   அந்த ஒன்றியங்களில் பணிஏற்ற நாளை Station seniority யாக கணக்கில் 
  எடுத்துக்கொண்டு மாவட்ட பணி மாறுதல் வழங்குதல்.     
* ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிவர பராமரிக்க அனைத்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குதல்.
*ஆசிரியர்களுக்கு  மேற்படிப்பு படிக்க அனுமதி கேட்டு ஆசிரியர் குறைதீர்
  கூட்டத்தில் விண்ணப்பிக்கும் பொது அன்றே பரிசிலனை செய்து  கண்டிப்பாக   ஆணைகள் வழங்க ஆணையிடுதல் 
*ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில்  அனைத்து AEEO  க்களும் கண்டிப்பாக 
  கலந்துகொண்டு. உடனேயே  ஆணைகள் வழங்க ஆணையிடுதல் 
* மாவட்ட பணி மாறுதல் பெற்ற சில ஆசிரியர்களுக்கு ஊதியம்  மற்றும் பதவி    உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் உடனே வழங்கிட    
   ஆணையிடுதல்.மேலும் விரிவாக விரைவாக பதிவேற்றம் செய்யப்படும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...