ஆசிரியர் பணிக்கு போராடுபவர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்து ஆசிரியர் பணி நியமனத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து ஆசிரியர் பணி நியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் கடந்த ஒரு வாரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த இந்த இளைஞர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள். இவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...