வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.எட். நுழைவுத் தேர்வை வினாத் தாள் குழப்பத்தால் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணித்து தேர்வு அறையை விட்டு
வெளியேறினர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் எம்.எட் நுழைவுத் தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. வேலூர் மாவட்டத்தில், வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி தேர்வு மையமாகச் செயல்பட்டது.
இந்த மையத்தில் தேர்வு எழுத 863 மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடப்பட்டது. இவர்களில் 400 பேருக்கு மட்டுமே ஓஎம்ஆர் விடைத் தாள் வந்திருந்தது. மீதமுள்ளவர்களுக்கு ஒரே வரிசை எண்ணில் உள்ள ஓஎம்ஆர் விடைத் தாளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாகத் தெரிகிறது. அதிலும், 190 பேருக்கு மட்டுமே இந்த ஜெராக்ஸ் விடைத் தாள் கொடுக்கப்பட்டதாம்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்து வெளியேறினர். ஜெராக்ஸ் விடைத் தாளில் தேர்வு எழுதுவதில் எவ்வித பலனும் கிடையாது. அந்த விடைத்தாளைக்கூட எல்லோருக்கும் தேர்வு நடத்துவோரால் வழங்க முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து சிறிதுநேரம் கோஷம் எழுப்பிச் சென்றனர்