சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரின் அங்கீகாரம் அவசியம்

அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான இணைப்பைப்
பெற மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என சி.பி.எஸ்.இ. அமைப்பு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பிரிவு 12-இல் தமிழக அரசு திருத்தம் வெளியிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு வகையான பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு தனித்தனி அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவில் இடம்பெறாத அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய திருத்தம் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பழைய விதிகளின் படி அங்கீகாரம் வழங்கும் அலுவலர்கள், பள்ளிகளின் விவரம்:

1. தொடக்கக் கல்வி இணை இயக்குநர் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள்; 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள்.

2. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள்.

3. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) - ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அல்லது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள்.

4. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகள் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அல்லது 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை.

5. மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர் - மெட்ரிக் பள்ளிகள்

6. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) - ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்



புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு: 7. பள்ளிக் கல்வி இயக்குநர் - அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தவிர அனைத்துவகைப் பள்ளிகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...