SSTA மாநில பொறுப்பாளர்கள் மதிப்புமிகு தொடக்ககல்வி இயக்குனர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை சந்தித்து CPS கணக்கு ஒப்புகை சீட்டு பற்றி கேட்டபொழுது சென்னை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள
முதன்மை கணக்கு
அலுவலர் திரு. அமரநிதி அவர்களை சந்தித்து விபரம் கேட்க வழிகாட்டினர்.
நம் மாநில பொறுப்பாளர்கள் CPS கணக்கு ஒப்புகை சீட்டு பற்றி கேட்டபொழுது " தற்போது தான் TPF கணக்கு விபரங்களை தணிக்கை செய்து AG அலுவலகத்திற்கு அனுப்பி வருகிறோம்.அடுத்து அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் அந்த ஒன்றியங்களில் CPS பணம் பிடித்த விபரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு DATA CENTRE மூலம் விரைவில் CPS கணக்கு ஒப்புகை சீட்டு வழங்க ஆவண செய்கிறோம் " என்று கூறினார். மேலும் cps திட்டத்தில் இந்தியாவில் உள்ள எவரும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் அல்லது எந்த ஒரு பணப்பலனை பெறவில்லை இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு நம்மிடம் பிடித்த தொகை,அரசின் பங்களிப்பு சேர்த்து மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் அவர்கள் தான் வீதி முறைகளை வகுத்து ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார் .நமது இயக்கம் எடுத்த எந்த கோரிக்கையையும் விடாது விரைவில் இதிலும் வெற்றி பெறுவோம் !!!!
