குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு: புதுவையில் 8 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள் ராதாகிருஷ்ணன் எம்.பி. தகவல்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் புதுவையில் 8 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள் என்று ராதாகிருஷ்ணன் எம்.பி. கூறினார். ஓய்வூதியம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் விழா நேற்று காலை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. விழாவிற்கு வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
உதவி ஆணையர் சங்கரலிங்கம் வரவேற்று பேசினார். விழாவில் ராதாகிருஷ்ணன் எம்.பி. கலந்து கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 8 ஆயிரம் பேர் குடும்ப பென்ஷன் திட்டம் கடந்த 1995-ம் ஆண்டு தான் தனிநபர் பென்ஷன் திட்டமாக மாற்றப்பட்டது. அதன்பின்னர்தான் பென்ஷன் வாங்குபவர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகள் பணியாற்றியவர் களுக்கு ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தற்போது பணியில் சேர்ந்து 10 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் அவர்களுக்கு வாரிசுதாரர்களுக்கு கால நிர்ணயம் இன்றி ஓய்வூதியம் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய வரம்பை ரூ.6500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. புதுவையில் 13 ஆயிரம் ஓய்வூதியர்களில் 8 ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுகின்றனர். தற்போது அவர்களுக்கு அந்த தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 32 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். பெற்றோர்களை வயதான காலத்தில் பிள்ளைகள் பாதுகாக்க முடியாத நிலையில் இந்த திட்டம் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் எம்.பி. பேசினார். கலந்து கொண்டவர்கள் விழாவில் வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன், ஓய்வூதியதாரர்கள் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக கணக்கு அதிகாரி தியாகராஜன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...