ஸ்கைப்' இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
"ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், மலிவான கட்டணத்தில் பார்த்துப் பேசி மகிழ முடியும் என்பதால், மிகுந்த வரவேற்பை "ஸ்கைப்' பெற்றது.