டில்லியில் மூன்று நாட்கள் நடக்கும் தேசிய அறிவியல் கண்காட்சியில், விட்டலாபுரம் அரசு பள்ளி மாணவன் கலந்து கொள்கிறார்.
திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த
கபிர்தாஸ் மகன் முருகவேல். விட்டலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் கடந்த ஆக., 25ம் தேதி திண்டிவனம் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் விட்டலாபுரம் பள்ளி சார்பில் கலந்து கொண்டார்.
மண்ணின் ஈரப்பதத்தை கண்டறியும் கருவியை உருவாக்கி பார்வைக்கு வைத்திருந்த, இவருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு கிடைத்தது. கடந்த மாதம் 7, 8 தேதிகளில் திருச்சியில் நடந்த மாநில போட்டியில் கலந்து கொண்டார். இங்கும், இவருக்கு மாநில அளவில் முதல் பரிசு மற்றும் தங்கம் வழங்கப்பட்டது.
டில்லியில் நேற்று 6ம் தேதி முதல் நாளை 8ம் தேதி வரை நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக, விட்டலாபுரம் பள்ளி அறிவியல் ஆசிரியர் குமரகுருவுடன் டில்லிக்கு சென்று போட்டியில் பங்கேற்றார்.