வரைவு வாக்காளர்கள் பட்டியலில் வரும் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம்

வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை (அக்.15) வெளியிடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.


அப்போது, தமிழகத்தில் வாக்குச்சாவடிகளை அதிகரிக்க வேண்டும் என்று கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் பிரவீண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு, கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறியது:

கிரிராஜன் (திமுக): வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக, உள்ளூர் கட்சிப் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களது கருத்துகளைக் கேட்பது அவசியம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடிகளை அமைப்பதில் பிரச்னை உள்ளது. சில இடங்களில் 2 கி.மீட்டருக்கும் அப்பால் வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே, வாக்காளர்களின் வசதிக்காக அவர்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.

கே.டி.ராகவன் (பாஜக): தமிழகத்தின் குக்கிராமங்களில் வாக்குச் சாவடிகள் தொலைதூரத்தில் அமைக்கப்படுகின்றன. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலையை மாற்றி, குக்கிராமங்களாக இருந்தால் 200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்று மாற்றியமைக்க வேண்டும்.

பார்த்தசாரதி (தேமுதிக): ரேஷன் அட்டை, கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை இருந்து வருகிறது.

ஆனால், இப்போது பஞ்சாயத்துத் தலைவரின் கடிதம், பெற்றோர் அடையாளம் காட்டினால் அவர்களது பிள்ளைகளை வாக்காளர்களாகச் சேர்க்கும் புதிய நடைமுறை இருப்பதாக அறிகிறோம். அதில், முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அதைக் கடுமையாக எதிர்த்தோம்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். மேலும், அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களையும் அகற்ற வேண்டும்.

மற்ற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பத்திரிகையாளர்களிடம் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குள் 18 வயது நிறைவடைபவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், முகவரி மாற்றம், பெயர் விடுபட்டிருத்தல் போன்ற குறைகள் வாக்காளர் பட்டியலில் இருந்தால் அதையும் சரிப்படுத்த உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் மக்களின் பார்வைக்கு வரும் 15-ஆம் தேதி வைக்கப்பட உள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி வரை பெயர்களைச் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...