அடுத்த 5 ஆண்டுகளில் டெலிகாம் துறையில் 40 லட்சம் பணி வாய்ப்புகள்?

எதிர்வரும் 5 ஆண்டுகளில், இந்திய டெலிகாம் தொழில்துறையில், சுமார் 40 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில், இணையப் பயன்பாடு அதிகரித்து வருவது மற்றும் நாட்டினுடைய 2.5 லட்சம் பஞ்சாயத்துக்களை அதிவேக பிராட்பேன்ட் இணைப்பு மூலம் ஒருங்கிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஆகிய அம்சங்களின் அடிப்படையிலும் இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டெலிகாம் துறையில், டெக்னீசியன், இன்ஸ்டாலேஷன், சர்வீஸ் அன்ட் மெயின்டெனன்ஸ் புரவைடர்ஸ், சேல்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் எச்.ஆர் ஆகிய பிரிவுகளில் அதிகளவு பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு, 35% என்ற அளவிற்கு டெலிகாம் துறை வளர்ந்து வருகிறது. இத்துறை சுருங்கியிருந்ததெல்லாம் அந்த காலம். ஆனால், தற்போது நாட்டின் பெரிய தொழில் துறைகளில் அதுவும் ஒன்று.

அடுத்த 5 ஆண்டுகளில் நேரடி மற்றும் மறைமுக அடிப்படையில், இத்துறையில், சுமார் 40 லட்சம் பணி வாய்ப்புகள் உருவாகும் என்றும், இந்தப் பணிகள், கிராமப் புறங்களில் இணையதள பயன்பாட்டை அதிகரித்தல், மொபைல் இணையப் பயன்பாடு மற்றும் பிராட்பேன்ட் இணைப்புகளை அதிகரிப்பதன் மூலம் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...