பள்ளியில் துப்புரவு பற்றி விழிப்புணர்வு போட்டிகள் நடத்திட வேண்டும்

பள்ளிகளில் இந்திய துப்புரவு வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரை, ஓவிய போட்டிகளுக்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளிக் கல்வி இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம்,
அனைத்து மாநிலங்களிலும் இந்திய துப்புரவு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வீடுகள் மற்றும் பள்ளியை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து மாணவர்களை உறுதிமொழி எடுக்கச் செய்தல் போன்ற கருத்துகளை உள்ளடக்கி, இந்திய துப்புரவு வாரம் கடைபிடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று (8ம் தேதி), 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான 50 முதல் 100 மாணவ மாணவிகளை கொண்டு சுத்தமான இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.

10ம் தேதி என் சுற்றுப்புறத்தை நான் ஏன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்? என்ற தலைப்பில், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. 13ம் தேதி, இதே தலைப்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவதுடன், அவர்களின் படைப்புகளை, கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்திற்கு, மாநில அளவில் தேர்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...