6 நாட்களில் 114 மில்லி மீட்டர் மழை பதிவு: கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 6 நாட்களில் 114 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதிகளவு மழை
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்தாண்டு 15 நாள் தாமத்திற்கு பிறகு தான் தொடங்கியது. தாமதமாக
தொடங்கினாலும், ஓரிரு நாட்களில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பொழிந்தது.

கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகத்தின் சராசரி மழையளவு 114 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 64 மில்லி மீட்டர் மழை தான் பெய்திருந்தது.

மதுரை 50 மி.மீ.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 6 நாட்களில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர் - 108, சென்னை-295, கோவை-95, கடலூர்-210, தர்மபுரி-30, திண்டுக்கல்-145, ஈரோடு-85, காஞ்சீபுரம்-93, கன்னியாகுமரி-129, கரூர்-80, கிருஷ்ணகிரி-35, மதுரை-50, நாகப்பட்டினம்-326, நாமக்கல்-33, நீலகிரி-131, பெரம்பலூர்-58, புதுக்கோட்டை-70, ராமநாதபுரம்-192, சேலம்-53, சிவகங்கை-100, தஞ்சாவூர்-126, தேனி-96, திருவாரூர்-229, தூத்துக்குடி-168, திருச்சி-64, நெல்லை-244, திருப்பூர்-94, வேலூர்-31, விழுப்புரம்-91, விருதுநகர்-39.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...