அடுத்த கல்வியாண்டு முதல் தொலைமுறை கல்விக் கூடத்தில், ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கை நடத்த, பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி கூடத்தில், 51 இளங்கலை படிப்புகள், 33 முதுகலை படிப்புகள், 34 எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், 38 முதுகலை டிப்ளமோ, 47 டிப்ளமோ படிப்புகள், 16 சான்றிதழ் படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., பி.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2014-15ம் கல்வியாண்டு முதல் எம்.எட்., படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இக்கல்வி முறையில் பயின்று வருகின்றனர்; இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மாணவர்கள் இக்கல்வி முறையில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த ஜூலை முதல் நடந்துவருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்கள் மற்றும் பல்கலை தொலைமுறை கல்விக் கூடத்தில் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று மாணவர்கள் சேர்க்கைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதியும், சேர்க்கையை எளிமைப்படுத்தும் விதத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த பல்கலை திட்டமிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் கோவிந்தராஜ் கூறுகையில், "தொலைமுறை கல்விக்கூடத்தில் கம்ப்யூட்டர் பிரிவானது உரிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கை விரைவாகவும், சுலபமாகவும் நடத்த பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்து, படிப்பு மையங்களின் ஒருங்கிணைப்புடன், ஆன்லைன் முறையில் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தேர்வு மையங்களை கண்காணிக்க கேமரா வசதி பொருத்தவும் துணைவேந்தர் திட்டமிட்டுள்ளார்" என்றார்.
அலைச்சல் மிச்சம்: அட்மிஷன் சுலபம்!
தொலைமுறை கல்விக்கூட இணையதளத்தில் அனைத்து விபரங்களும் விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை இடம்பெற்றால் வெகுதொலைவில் இருந்து பயில விரும்பும் மாணவர்களுக்கு அலைச்சல் மிச்சம். பெரும்பாலான பணிகள் இணையதளம் வாயிலாக முடிந்துவிடும் என்பதால் மாணவர்கள் சேர்க்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.