துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவர்கள் பலர், சென்னையில் ரயில் நிலையம், மருத்துவமனை, பள்ளி போன்ற பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும், துாய்மை இந்தியா திட்டத்தை, கடந்த 2ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதை முன்னிட்டு,
சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் செயல்பட்டு வரும், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சென்னையை சுத்தப்படுத்தும் சேவையில் ஈடுபட்டனர்.
மொத்தம், 2,500க்கும் அதிகமான மாணவர்கள், இதில் கலந்து கொண்டனர். அவரவர் படிக்கும் கல்லுாரிக்கு அருகில் உள்ள, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை, பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட பொது இடங்களை, அவர்கள் துாய்மைப்படுத்தினர்.
பணியை தொடர்வோம்
இதுகுறித்து, சென்னை பல்கலை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், "சென்னையை துாய்மைப்படுத்தும் பணி மூலம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், பூங்காங்கள், அரசு பள்ளிகள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட பகுதிகளை, மாணவர்கள் துாய்மைப்படுத்தினர்" என்றார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், பாரிமுனையில் உள்ள, தனியார் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவியர் 60 பேர், நேற்று முன்தினம் காலை, 10:00 மணி முதல் பகல் 1:30 மணி வரை, ராயபுரம் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இன்று ஒரு நாள் மட்டும் என்றில்லாமல், வாரம் ஒரு முறையாவது, அவரவர் பகுதியில் உள்ள பொது இடங்களை, பொதுமக்கள் சுத்தப்படுத்த வேண்டும். வரும் நாட்களில், நாங்கள் அதை கடைப்பிடிப்போம்" என்றனர்.
விழிப்புணர்வு பேரணி
ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்ட, துாய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி, நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில், துாய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்ககள் வினியோகிக்கப்பட்டன.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த, 52 மாணவ, மாணவியர் இணைந்து, வியாசர்பாடியில் உள்ள, ஜீவா ரயில் நிலையம், சுரங்கப்பாதை, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளை துாய்மைப்படுத்தும் சேவையில் ஈடுபட்டனர்.
200 கிலோ குப்பை அகற்றம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே ஊழியர்கள் 200 பேர், கல்லுாரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து, நேற்று காலை 9:௦௦ மணிக்கு, ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் மற்றும் காகித குப்பைகளை அகற்றினர். கறை படிந்து கிடந்த ரயில் நிலையத்தை கழுவி சுத்தம் செய்தனர். மாலை 5:00 மணி வரை நடந்த துாய்மைப்படுத்தும் பணியில், ரயில் நிலையத்தில் தேங்கி கிடந்த, 200 கிலோ குப்பையை, ஊழியர்கள் அகற்றினர். இந்த திட்டத்தில் பணிபுரிய, கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் உள்ளதால், ஒவ்வொரு வாரமும் குப்பையை அகற்ற, ரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். திருவொற்றியூர், தேரடியில் உள்ள அஞ்சலகத்தில், பல அரசு ஊழியர்கள் அஞ்சலகத்தை சுத்தப்படுத்தினர்.