ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் இடம் பெற்றுள்ளார்.
தென் கொரியாவில், இன்ச்சான் நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. கபடி போட்டியில்
ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த ராஜகுரு இடம்பெற்றுள்ளார். கடந்த, 2005ல், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில் ராஜகுரு, இந்திய அணி கேப்டனாக விளையாடினார்.
கடந்தாண்டு சீனாவில் நடந்த பீச் கபடி போட்டியில், இந்திய அணி சார்பில் விளையாடினார்; இந்தியா இரண்டாம் இடம் பெற்றது. அதன்பின், புரோ கபடி போட்டியில் ஆந்திர மாநிலம் தெலுங்கு டைட்டன் அணியின் கேப்டனாக விளையாடினார். தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று, இந்தியாவிற்கு தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே, ஐ.சி.எப்., அணியின் கபடி வீரராக இருந்தார். தற்போது பெங்களூருவில் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார்.