வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் தாமதம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் பதிவு செய்வதற்கான அரசு உத்தரவிற்காக, மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.


கடந்த 2011 முதல் 2013 வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதி பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் பதிவு மூப்பை மீண்டும் பெற சிறப்பு சலுகை வழங்கப்படும் என ஜூனில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அரசு உத்தரவு வராததால் சிறப்பு சலுகையில் பதிவுசெய்ய முடியவில்லை. அரசு உத்தரவை விரைவில் வெளியிட வேண்டும் என பதிவுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...