தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட அளவில் மாதாந்திர தடகளப் போட்டிகள் வரும் 11ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், நீச்சல் போட்டிகளும், உள் விளையாட்டு அரங்கில் இறகு பந்து போட்டிகளும் நடக்க உள்ளன.
வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். தடகளத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர், 200 மீ., 800 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கான 100 மீட்டர், 200 மீ., 800 மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளும் நடக்கிறது.
இதேபோல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுபந்து போட்டிகளும் நடக்க உள்ளன. மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள், ஐந்து பிரிவுகளில் நடக்கிறது.