நாக்' அங்கீகாரம்: அண்ணா பல்கலை.க்கு "ஏ

சென்னை, அக்.6: அண்ணா பல்கலைக்கழகம் 3.46 புள்ளிகளைப் பெற்று "ஏ' கிரேடு "நாக்' அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கமாகச்
செயல்பட்டு வரும் தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சில் (நாக்) உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து அங்கீகாரம் அளித்து வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கானதாகும்.

இந்த அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் ஆராய்ச்சி ஈடுபாடு, கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை கவுன்சில் சார்பில் அமைக்கப்படும் பேராசிரியர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், குறைந்தபட்சம் 3.01 புள்ளிகள் முதல் 4 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு வழங்கப்படும்.

2.01 முதல் 3 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு "பி' கிரேடு, 1.51 முதல் 2 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனங்களுக்கு "சி' கிரேடு, 1.5 புள்ளிக்குக் கீழ் வாங்கும் கல்வி நிறுவனத்துக்கு "டி' கிரேடும் வழங்கப்படும். இந்த அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டே, கல்வி நிறுவன மேம்பாட்டுக்கான மத்திய அரசின் பல்வேறு நிதியுதவித் திட்டங்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

இதுபோல, முதல் சுற்று அங்கீகாரம் காலவதியாகிவிட்டதால், இரண்டாம் சுற்று அங்கீகாரத்துக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு "ஏ' கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் 18 கல்வி நிறுவனங்களுக்கு "நாக்' அங்கீகாரம் கிடைத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...