தொடங்கியது வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சனிக்கிழமை (அக்டோபர்18) தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர்19)
தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக பருவமழை தொடங்கி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரண்டு விதமான பருவமழைக் காலங்கள் உள்ளன.

தென்மேற்குப் பருவமழையின் போது தமிழகம் தவிர பிற பகுதிகளில் மழை பெய்யும். வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தில் மட்டும் மழை பெய்யும்.

நிகழாண்டு இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை சராசரியாகப் பெய்துள்ளது. மேலும், பருவமழையின் தாக்கம், வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்திலும் ஓரளவு மழை பெய்தது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் முழுமையாக சனிக்கிழமை நிறைவு பெற்றது. அதேவேளையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.

மேலும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும்.

2004-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை வடகிழக்குப் பருவமழை கூடுதலாகப் பெய்துள்ளது. ஆனால், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பற்றாக்குறையாகப் பெய்துள்ளது.

3 நாள்கள் முன்பே... கடந்த ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதிதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.

ஆனால், நிகழாண்டு 3 நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் வங்கக் கடலில் பாய்லின், ஹெலன், லெகர், மாதி ஆகிய 4 புயல்கள் உருவாகின.

இதில், பாய்லின் புயல் ஒடிஸாவிலும், ஹெலன் புயல் ஆந்திரத்திலும் கரையைக் கடந்தன. லெகர் புயல் முதலில் அந்தமான் தீவுகளை புயலாகக் கடந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ஆந்திர மாநில கடற்கரையைக் கடந்தது.

கடந்தாண்டு உருவான 4 புயல்களில் மாதி புயல் மட்டுமே தமிழக கடற்கரையில் கரையைக் கடந்தது. அடுத்தடுத்து புயல்கள் உருவானதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதி, நிலப் பகுதியில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதே பருவமழை குறைந்து போனதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு பற்றாக்குறை: கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது 33 சதவீதம் குறைவான மழை பெய்தது. இதில், தருமபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே சராசரியான மழை பெய்தது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பற்றாக்குறையான மழையே பெய்துள்ளது. நிகழாண்டு சராசரியாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...