காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த இரு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இலங்கை - தமிழக கடற்கரையை ஒட்டிய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் வெள்ளிக்கிழமை உருவானது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இடைவிடாது மழை பெய்தது.
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 180 மி.மீ.: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் 180 மி.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 160 மி.மீ. மழையும் பதிவானது. பாபநாசம், புதுச்சேரி, சீர்காழி, பரங்கிப்பேட்டையில் 130 மி.மீ. மழையும், தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரத்தில் 120 மி.மீ. மழையும் பதிவாகிவுள்ளது.