கண்தான விழிப்புணர்வு கையொப்பமிடும் முகாம்

உலகப் பார்வை இழப்பு தடுப்பு தினம் மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கையொப்பமிடும் முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் கடலூர் துறைமுகம் லயன்ஸ்
சங்கம் சார்பில் 15வது உலகப் பார்வை இழப்பு தடுப்பு தினம் மற்றும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கையொப்பமிடும் முகாம் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் வரவேற்றார். இணை இயக்குனர் வித்யா சங்கர், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ., ஷர்மிளா, ஜவகர்லால் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு முகாமில், கலெக்டர் சுரேஷ்குமார் கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, கண் மருத்துவத்துறை தலைவர் ஸ்ரீகாந்த், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் அசோக், ரமேஷ்பிரபா, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி பயிற்சி செவிலியர்கள் பங்கேற்றனர். லயன்ஸ் சங்கம் சரவணன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...