அறிவியலில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,” என நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் கேட்டுக்கொண்டார்.
சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி ரமேஷ், பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர். 1987ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பிஎச்.டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டன் மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது பெயர் இந்த ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. ‘காம்ப்ளக்ஸ் ஆக்ஸைடுகள்’ பற்றி ஆராய்ச்சிகள் செய்ததற்காக இவர் நோபல் பரிசு போட்டியில் இருந்தார்.
கடைசி பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாவிட்டாலும், ஒரு தமிழரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதே பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
தினமலர் நாளிதழுக்கு இ-மெயில் மூலம் அவர் அளித்த சிறப்பு பேட்டி: இந்தியா அறிவியல் தொழில்நுட்ப துறையில் வளர்ந்து வரும் நாடாக திகழ்கிறது. இளைஞர்கள் இதை பயன்படுத்தி உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த விஞ்ஞானிகளாக வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டுக்கும் பெருமை கிடைக்கும்.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லுரிகளில் படிக்கும் மாணவர்கள் அறிவியலில் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் அறிவியல் அழகானது. ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்தது. அறிவியலில் இருந்து தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதும் சமமான விருதுக்குரியதே. இந்திய இளைஞர்கள் சாதிக்க வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளார்.