வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் இலங்கை- தமிழக கடற்கரையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை தொடரும். சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் காரைக்காலில் 120 மி.மீ. மழையும், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் 110 மி.மீ., பாபநாசத்தில் 100 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.