வட்டார வளமையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கணிதத்திறன் மேம்படுத்தும் பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பேசுகையில், "பள்ளி மாணவ, மாணவியருக்கு கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி, சிறு விளையாட்டுக்கள் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் பயிற்சிகளை சிறந்து முறையில் அளித்திட வேண்டும்" என்றார்.
உதவித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாண்டிமாதேவி, 32 ஆசிரிய பயிற்றுனர்கள், 8 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் அன்பு, ஆசிரியர் பயிற்றுனர்கள் மகேந்திரன், குருசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்திருந்தார்