நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாணவர்களுக்காக, புத்தாக்க ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக மத்திய மனிதவளத் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: மாணவர்களை, புதிய
சிந்தனைகளை நோக்கி திருப்பி, பள்ளி மற்றும் பல்கலைக்கழக அளவில், ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவுமே, அரசு நிதியுதவியின் கீழ், இந்த ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு பெயர் "ராஷ்ட்ரிய ஆவிஷ்கார் அபியான்" என்பதாகும்.
இந்த புதிய ஆய்வகங்களின் மூலம் மாணவர்கள், தங்களின் புத்தாக்க சிந்தனைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஆய்வகங்கள், பரிந்துரைக்கப்பட்ட அல்லது இலக்கிடப்பட்ட உயர்கல்வி கவுன்சிலுடன், தொழிற்சாலை - கல்வி நிறுவன ஒத்துழைப்பின் அடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கும்.
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், நிதி ஆதாரங்கள் திரட்டப்படும். அடுத்தாண்டு துவக்கத்தில் இது நிறுவப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.