சென்னையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் நடைபெறும் பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு செய்து பரிந்துரை கடிதம் பெறப்படுவது குறித்தும், 15 தினங்களுக்கு ஒருமுறை கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 16 சட்டசபை தொகுதிகள், மூன்று லோக்சபா தொகுதிகளின், மக்கள் பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி கமிஷனர் மூலமாக செலவு செய்யப்படுகிறது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பரிந்துரை கடிதம் மட்டுமே அளிக்கின்றனர். ஆனால், சமீபகாலமாக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சி அதை முறையாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
'குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதியை பயன்படுத்த முடியும்; ஆனால், அது தெரியாமல் இஷ்டத்திற்கு பரிந்துரை கடிதம் அளிக்கின்றனர்; அவர்கள் ஒதுக்கும் தொகை, செய்யும் பணிகளுக்கு போதுமானதாக இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதியை பயன்படுத்த முடியவில்லை' என, மாநகராட்சி அதிகாரிகள் கூறி வந்தனர். இதில், முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ரிப்பன் மாளிகையில் மூன்று வட்டார துணை கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி நடத்தினார்.
அதில், மேயர் வழங்கிய அறிவுரைகள்:
* எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கும் பரிந்துரை கடிதங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* இந்த கடித நகல்கள், உடனடியாக மேயர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* நிதியை பயன்படுத்தும் விஷயத்திலோ அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோருவது தொடர்பாகவோ, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* முடிந்தவரை எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் கடிதம், தபால் வாயிலாக தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தொலைபேசி மூலம் உடனுக்குடன் பேசி, பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு தொகுதிவாரியாக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் செய்யப்படும் பணிகள், அதன் நிலவரம், ஒதுக்கீடு செய்த பணிகள், ஒப்பந்த நிலை என, எல்லா விவரங்களையும் 15 தினங்களுக்கு ஒருமுறை மேயர் அலுவலகத்திற்கு மூன்று வட்டாரங்களில் இருந்தும் அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, மேயர், அறிவுரைகள் வழங்கினார்.