வியாழன் உள்ளிட்ட கிரகங்களுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சி பரிசீலனையில் உள்ளது” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில்
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சார்பில் விண்வெளி கண்காட்சி துவக்க விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட விஞ்ஞானி இங்சர்சால் பேசியதாவது: விண்வெளி ஆராய்ச்சியில் மற்ற நாடுகள் வியக்கும் வகையில் இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. மங்கள்யானை அனுப்பிய முதல் முயற்சியில் இந்தியா வெற்றி அடைந்துள்ளது. ஆளில்லா செயற்கைக்கோள் பூமியை சுற்றி விட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளது. 2007 ல் முதன் முதலில் ஆளில்லா செயற்கைகோளை அனுப்பி இந்தியா வெற்றியை எட்டியது.
இயற்கை வளம், தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஏழு செயற்கைக் கோள்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இவற்றில் மூன்று செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. மற்றவை இன்னும் சில மாதங்களில் செலுத்தப்பட உள்ளன. பி.எஸ்.எல்.வி.,செயற்கைக்கோளை 27 முறை அனுப்பி இந்தியா சாதித்துள்ளது. அறிவியலில் முன்னேறியதாக கூறும் நாடுகள் கூட, இதில் தொடர் வெற்றியை பெறமுடியவில்லை. சந்திரன், செவ்வாய்க்கு செயற்கைக்கோள்களை அனுப்பி எட்டிய வெற்றியை போல், வியாழன் உள்ளிட்ட கிரகங்களுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சி பரிசீலனையில் உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஆறு நாடுகள் முன்னேறி உள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்பது மகிழ்ச்சி. இவ்வாறு பேசினார்.