சேலம் மாவட்டத்தில், புதிய வாக்காளர் அட்டை பெறுவதற்கு, வழங்கப்பட்டு வந்த, "001சி' படிவம் வழங்க, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். வாக்காளர் அட்டை தொலைந்து போனவர்கள், புதிய அட்டையை பெற முடியாததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட அட்டவணைப்படி, 2015ம் ஆண்டு ஜன., 1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிக்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 15ம் தேதி வெளியிடப்பட்டது.இந்த பட்டியல், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், மற்றும் வரையறுக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் வைக்கப்பட்டது. வாக்காளர்கள் நவ., 10ம் தேதி வரை, காலை, 10 மணியில் இருந்து, மாலை, 5 மணி வரை, பட்டியலை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் 6), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (படிவம் 6 ஏ), நீக்கம் செய்தல் (படிவம் 7), திருத்தம் செய்தல் (படிவம் 8), ஒரே சட்டசபை தொகுதிக்குள் வேறு தெரு அல்லது வேறு பகுதிக்கு இடம் பெயர்தல் (படிவம் 8 ஏ) ஆகியவற்றுக்கான, விண்ணப்பங்கள், அனைத்து தேர்தல் பிரிவு மையங்களில் வரவேற்கப்பட்டது.
தவிர, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.ஒருவரது வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போவது அல்லது கிழிந்து போவது உள்ளிட்ட காரணங்களால், புதிதாக அட்டை பெற விரும்பும் வாக்காளர்களுக்கு, அந்தந்த தேர்தல் பிரிவு மையத்தில், "001 சி' படிவம் வழங்க வேண்டும்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, 25 ரூபாய் கட்டணம் செலுத்தும் வாக்காளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.ஆனால், சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள தேர்தல் பிரிவு மையங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, "001 சி' படிவம் அனுப்பப்படுவதில்லை. மேலும், அந்தந்த தேர்தல் பிரிவு மையங்களிலும், வாக்காளர்கள், "001 சி' படிவத்தை கேட்டால், அதிகாரிகள் இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பாஸ்போர்ட், கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி உள்ளிட்ட அரசு திட்டங்களின் பயன்பாட்டை பெற விரும்பும் பயனாளிகள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, "001 சி' படிவம் வழங்கப்படுவதில்லை. வாக்காளர் அடையாள அட்டை, குடிமகனின் பிரதான அடையாளமாகும். அதன் முக்கியத்துவம் மற்றும் அவசியத்தை உணர்ந்து தான், தேர்தல் ஆணையம், வாக்காளர் அட்டை தொலைந்து போனால் கூட, அதை மீண்டும் பெறுவதற்கு, "001 சி' படிவத்தை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் நிறைய பேர் பலன் அடைந்தனர். ஆனால், தற்போது, அந்த விண்ணப்பம் வழங்குவது நிறுத்தப்பட்டு, புதிய அட்டை வழங்கும் பணி முடக்கப்பட்டுள்ளது, வாக்காளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில், "001 சி' படிவம் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.சேலம் வடக்க, தெற்கு, மேற்கின் ஒரு பகுதிக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் தான் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது, அங்கும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்மந்தப்பட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.