குரூப் 4 தேர்வு: நவ.14-இல் இலவசப் பயிற்சி

குரூப்-4 தேர்வுக்கு பெரியார் பயிற்சி மையம் சார்பில் நவ.14-இல் இலவச வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி:


 பெரியார் பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை (நவ.14) மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவச வழிகாட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் அனுபவம்மிக்க பேராசிரியர்கள், தேர்வுக்கு தயார் செய்வது பற்றியும், தேர்வு அணுகுமுறை, தேர்வு நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்வோர் 99406 38537, 044-2661 8056 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...