வங்கிகளின் மறுசீரமைப்பு கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரிக்கும்

வரும், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்திய வங்கிகளின் மறு சீரமைப்பு கடன், 60 ஆயிரம் கோடி – 1 லட்சம் கோடி அதிகரிக்கும் என, இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில், வங்கிகளின்
வசூலாகாத மற்றும் மறுசீரமைப்பு கடன், 6 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதில், வசூலாகாத கடனின் பங்களிப்பு, 45 சதவீதமாகவும் (2.55 லட்சம் கோடி ரூபாய்), மறு சீரமைப்பு கடனின் பங்களிப்பு, 65 சதவீதமாகவும் (3.45 லட்சம் கோடி ரூபாய்) உள்ளன.சேவைகள் மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.
மேற்கண்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.இதன் காரணமாக, வரும் மார்ச் மாதத்திற்குள், வங்கிகளின் மறுசீரமைப்பு கடன், மேலும், 60 ஆயிரம் கோடி – 1 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, இந்தியா ரேட்டிங்ஸ் மூத்த நிதி இயக்குனர் தீப் முகர்ஜி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...