100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீதுநடவடிக்கை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.

கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம்அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கானஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வுகூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசியதாவது:
பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும். அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத தேர்ச்சியை எட்டாத பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...