அண்ணாமலை பல்கலை.யில் ஆவணங்கள் எரிப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும்
சட்டப்பேரவை உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) வலியுறுத்தினார்.

இது குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வியாழக்கிழமை (நவ. 6) அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே இருந்த நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய அதைத் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பாரம்பரியப் புகழ் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகம் பாதுகாக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரசு பல்கலைக்கழகமாக மாறிய பிறகும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துத் துறை மாணவர்களுக்கும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இது மற்ற அரசுக் கல்லூரிகளைவிட பல மடங்கு அதிகமாகும். இதனால் தகுதி அடிப்படையில் சேர்ந்த ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகக் கணினித் துறையில் பழைய அலமாரிகளைச் சுத்தம் செய்தபோது ரூ. 15 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மின்துறை அலுவலகத்தில் பல ஆண்டுகளாகப் பொருள்கள் வாங்கியதற்கான ஆவணங்கள், ரசீதுகள், கோப்புகள் எரிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகளின் தலையீட்டால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே, இந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...