மாலை 141 அடியைத் தாண்டியது. ஞாயிற்றுக்கிழமை அணை நீர்மட்டம் 142 அடியை எட்டக்கூடும் என்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கான தகவல் அனுப்பினர்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க
உச்சநீதிமன்றம் கடந்த மே 7-இல் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியைத் தாண்டியது. நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்ததை முன்னிட்டு, தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, தமிழக தலைமைச் செயலர், கேரள தலைமைச் செயலர், கேரள நீர்பாசனத்துறை, மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜித்குமார் பாட்டீல் பகவத்ராவ் ஆகியோருக்கு முறையாகத் தகவல் அனுப்பினர்.
தகவலில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, இடுக்கி அணை வரை குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு தெவித்துள்ளனர்.
152 அடியுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,357 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து, தமிழகத்துக்கு 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் மொத்த நீர் இருப்பு 7,342 மில்லியன் கன அடி.
ஞாயிற்றுக்கிழமை அணை நீர்மட்டம் 142 அடியாக எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால், மதுரை வைகை பெரியாறு பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் தமிழரசு, கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ், அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் குழு, அணையில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், பொதுப்பணித்துறை பதிவேட்டில் பதிவு செய்து, பின்னர் அதற்கு மேல் தண்ணீர் தேங்காமல் அணைக்கு வரும் நீர் வரத்து முழுவதையும் தமிழகத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, ஞாயிற்றுக்கிழமை முதல் போர்-பை அணையிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் வழியாகவும், இறைச்சல் பாலத்தின் வழியாகவும் தண்ணீரை தமிழகத்துக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கேரளாவுக்கு உபரி நீர் வெளியேறாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 ஆவது முறையாக 142 அடியை எட்டுகிறது
152 அடி நீர்மட்ட உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில், கடந்த 1972, ஜனவரி 2-ஆம் தேதி 142.45 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. 1975, அக்டோபர் 12-ஆம் தேதி அணை நீர்மட்டம் 143.30 அடியாக இருந்தது. 1977, நவம்பர் 4-ஆம் தேதி அணையில் 146.70 அடி வரையும், 1979, அக்டோபர் 13-ஆம் தேதி 143.70 அடி வரையும் தண்ணீர் தேக்கப்பட்டது.
மத்திய நீர்வள ஆணைய உத்தரவின் பேரில், பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தமிழக, கேரள அரசுகளிடையே கடந்த 1979, நவம்பர் 25-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதையடுத்து கடந்த 1980-இல் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணி தொடங்கிய நிலையில், அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பெரியாறு அணையில் 136.30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து, 5-ஆவது முறையாக கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 142 அடியை எட்டுகிறது.